அம்மா கவிதைகள் - Amma quotes in tamil - Kavithai Tamil Amma - Part 1
அம்மா தமிழ் கவிதைகள்
Amma Quotes in Tamil
கவிதைகள் தமிழ் வலைதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்,
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய தமிழ் மொழி கவிதைகள் தமிழ் மரபுடைய வார்த்தைகளைக் கொண்டு தங்களுக்கு எளிமையான தமிழ் மொழியில் கவிதைகள் இங்கே இடம்பெறுகின்றது, கவிதைகள் தமிழ் பதிவுகளில் நம் வாழ்க்கையில் நம்முடன் பயணித்து வரும் அம்மாவுக்காக தமிழ் மொழியில் கவிதைகளை தொகுத்து வழங்கி இருக்கிறோம், தமிழ் மொழியை எங்களுடன் சேர்ந்து நீங்களும் தமிழ் மொழிக் கவிதைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Amma Kavithai in Tamil:
கிடைக்காத ஒப்பற்ற செல்வம்
அம்மா மட்டும் தான்
அம்மா என்ற சொல்லுக்கு
இந்த உலகமே அடிமை
அதில் நான் மட்டும்
எப்படி தொலைந்து போவேன்
வாழ்வில் கவலைகள் எதுவும்
அற்று ஒருவன் உண்டு எனில்
அவன் தாயின் கருவறையில்
இருக்கும் குழந்தை மட்டுமே
கவிதையின் முதல் மொழி
குழந்தையின் மழலை
மொழியில் ம்ம்மா
உண்மையான தாயின் பாசத்தில்
வளரும் எந்த ஒரு குழந்தையும்
வழி தவறி போனதில்லை
நம்ம மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும்
நம்ம பெற்றோரிடம் சொல்றோம்.
ஆனால் அவங்க நம்மகிட்ட
ஒருநாளும் சொன்னதில்லை
அவங்களோட மன கஷ்டத்தை
உண்மை தானே
வாழ்க்கையில் பிரச்சனை
பல வந்தாலும் தாயின் மடியில்
ஒரு நொடி படுத்தால்
அனைத்தையும் மறந்து விடுவோம் நாம்
![]() |
Amma Kavithai in Tamil |
சந்தர்ப்ப சூழ்நிலையால்
ஒருவன் தவறு செய்தாலும்
குற்றவாளி என்று பார்க்கும்
உலகில் தனது மகனாய்
பார்க்கும் ஒரே ஜீவன் தாய்
தன் கருவில் சுமந்த உயிரை
ஒருபோதும் அழிக்க மாட்டாள்
உண்மையான தாய்
அம்மா என் கவலைகளை
ஒருபோதும் சொன்னதில்லை
உன்னிடம் ஆனால் அனைத்தையும்
அறிந்து கொள்வாய் நீ
நான் உன்னிடம் பேசும் ஒரு வார்த்தை
அந்த வார்த்தை அம்மா
Amma Quotes in Tamil
தன் பிள்ளை உண்ணவில்லை
என்றால் தானும் உண்ணாமல்
தன் நிலை மறந்து ஒருபோதும்
அமர மாட்டாள் தாய்
முதல் முறை உலகத்தில்
அனைத்தையும் ஒரே கண்ணோட்டம்
கொண்டு பார்க்கும்
தெய்வம் அம்மா மட்டுமே
தன் பிள்ளை ஊனமுற்றாலும்
தன்னுடைய குழந்தைக்கு
இந்த உலகத்தில் எதற்கும்
ஒப்பாகாது ஒரு தாய்க்கு
Amma Whatsapp Kavithai
Kavithai Tamil Amma
Amma Quotes Tamil
Amma Kavithai in Tamil
குழந்தை தாய்க்கு தீங்கிழைத்தாலும்
ஒருபோதும் தாய் தன் குழந்தைக்கு
கனவிலும் தீங்கிழைக்க மாட்டாள்
அம்மா சொல்லும் ஒவ்வொரு
வார்த்தையும் உன் உடம்பை
பேணிக் காக்கின்ற அருமருந்து
காலம் கடந்து சென்றாலும்
ஒருபோதும் விட்டு விடாதே
உன் தாயே அவள் துன்பம் என
நினைத்திருந்தால் உன்னை
கருவிலேயே அழித்திருக்கலாம்
இப்படி ஒரு நிலை ஏற்கவா??
அவள் கொண்ட கோபத்தில்
ஒருபொழுதும் உன்னை கண்டிக்காத
வண்ணம் கோபம் கொள்வாள் தாய்
அம்மாவை கண்ணீர் சிந்த வைத்த
எவரும் இந்த உலகத்தில்
நிம்மதியாக வாழ முடியாது
குழந்தையின் அழுகுரலை கேட்டு
முதலில் ஓடி வருபவள் தாய் மட்டுமே
அன்றி வேறு யாரும் உண்டோ
மகனே உன்னோடு நான்
வாழ்ந்திட வாழ்க்கை வேண்டுமென்று
கடவுளிடம் வரம் கேட்க
கடவுள் எனக்கு கொடுத்த வாழ்க்கை
விண்ணுலகம் வாழ வேண்டுமென்பது
Amma Kavithai Tamil
உன் முகம் பார்க்க ஆசை
கொண்டேன் மகனே நான்
ஆனால் தினம் தினம்
என் முகம் பார்க்க மறந்தேன்
மலர் போன்ற உள்ளம் கொண்ட
உன்னை விட பூக்களுக்கும்
மென்மை இல்லை அம்மா
அம்மா உன் பாதம் தொட்டு வாழ்ந்திட
எனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்திடுமா
உன் வாய் வழி கேட்டு உலகம் அறிந்த
உந்தன் சிறு பிள்ளை நான் அம்மா
கோபம் கொண்டு பேசினேன் என்று
ஒருபோதும் கோபித்துக் கொள்ளாமல்
மீண்டும் தன்னிடம் பேசும்
தாயின் அன்புக்கு எவரும் ஈடாக மாட்டார்
கடல் அலை மீண்டும் மீண்டும்
தொடர்ந்து வருவது போல்
உன் பாசமும் என்னை தொடர்ந்து
கொண்டு தான் இருக்கிறது அம்மா
தன் பிள்ளை வரும் நேரம் வரை காத்திருந்து
வந்தவுடன் சாப்பிடுகிறாயா
என்று கேட்கும் தாயைத் தவிர
இவ்வுலகில் வேறு எவரும் இலர்
நீ இல்லா உலகில் நான் வாழ வேண்டும்
என்று என்னை பழக்கப்படுத்தி
விட்டு சென்றாயே அம்மா
அம்மா உன் கருவறையில்
மீண்டும் அமர வேண்டும்
என்று ஆசைப்பட்டேன்.
ஆனால் நீயும் என்னை விட்டு
சென்றாய் கல்லறைக்கு
காலம் கடந்து வாழ்க்கையை
புரிந்து கொண்ட பிறகுதான்
தெரிந்ததம்மா
உன் தியாகம் பெரிதென்று
![]() |
Kavithai Tamil Amma |
Kavithai Tamil Amma:
குடும்பத்தை சுழல வைக்கும்
உலகத்தின் உன்னதமே
தாயே நீதானம்மா
வானம் உன் முகம் பார்த்து பேசும் போது
சிரிப்பதன் மொழி தான் மழைத்துளி அம்மா
உன்னை கோபம் கொண்டு
கடிந்து பேசும் பொழுதும் புன்னகை
புரிந்து ஏற்றுக் கொண்டாயே தாயே
கற்பனைக்கும் எட்டாத உன் மனம்
கொண்டு செல்லும் பாதை
தான் கடினம் அம்மா
கற்சிலைக்கும் கண்ணீர் வரும்
உன் பிரசவ வேதனையில்
நீ என்னை பெற்றெடுத்த போது அம்மா
வானவில் சொல்லும் வண்ணங்களில்
எவரும் அறிந்திடாத வண்ணம் நீதானம்மா
அழகுக் குரலில் பேசும் நீ
எவரும் புரிந்திடாத
புதிரும் நீயம்மா
கன்னத்தில் நீ கொடுக்கும் முத்தம்
மழையில் விழும் மின்னலை
விட வலுவானதம்மா
பிறர் துயர் கண்டு வருந்தும் அம்மா
உந்தன் நிலை கண்டு வருந்தும்
ஜீவன் நானம்மா
உலகம் நீயென்று உன்னை சுற்றிடும்
உந்தன் உலகமும் நான்தானம்மா
Amma Whatsapp Kavithai:
விதியின் கயிற்றில் ( தொப்புள் கொடி )
மாட்டிக்கொண்ட என்னை மீட்டெடுத்த
உலகின் மறு உருவமே
நீ இன்றி வேறுயாரும்மா
காலம் கடக்கையில் தோன்றுகிறது
தினம் தினம் நாட்கள் ஏன்
நகர்ந்து கொண்டிருக்கிறது என்று
சிறு வயது வாழ்க்கை
அப்படியே இருக்கக் கூடாதா என்று
பூக்களை சுற்றி வரும் வண்டு போல
தான் நீ தினம் தினம்
என்னை சுற்றுகிறாய் அம்மா
கடவுள் கொடுத்த வாழ்க்கை
அதை உலகிற்கு அறிமுகம்
செய்து வைத்தது நீதானம்மா
குழந்தை எனக்கு வரம் இல்லை
இந்த உலகில் எனக்கு கிடைத்த
அளவில்லாத வாழ்நாள் பொக்கிஷம்
தாயின் கருவறைக்குள் வாழ்ந்திட
அனைவருக்கும் ஆசையுண்டு.
ஆனால் மனிதன் தன்னுடைய
முழு வாழ்க்கையும் உலகம்
என்ற கருவறையில் தான்
வாழ்க்கை வாழ்கிறோம்
என்பதை மறந்து விடுகிறான்
கவிதை எழுதும் மரபை
கற்றுக் கொண்டேன்
என் தாயின் கருவறைக்குள் நான்
கட்டி அணைத்து முத்தமிடும்
தாயின் முத்தத்தில் அனைத்தையும்
மறந்து விடுகிறோம் நாம்
சின்னஞ்சிறு குழந்தையின் பேச்சில்
மயங்கி விடுகிறாள் தாய்
உலகம் எவ்வளவு அழகானது
என்பதை மறந்து
கண்ணீமைக்கும் நேரத்தில்
வந்து சொல்லுதம்மா
தாயே உன் ஞாபங்கங்கள்
________________________________________💗________________________________________
தங்களுடைய தமிழ் ஆர்வத்திற்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கவிதைகளை 💬 படித்ததிற்கும் மிக்க நன்றி மற்றும் பாராட்டுகள், மேலும் தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களை இங்கே எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
________________________________________💗________________________________________
அம்மா கவிதைகள் - feeling amma kavithai in tamil - amma kavithai in tamil - amma kavithai tamil - kavithai tamil amma - amma quotes in tamil - அம்மா கவிதை
Kavithai super
மிக்க நன்றி