வாழ்க்கை கவிதைகள் - Life Quotes in Tamil - Motivational Quotes in Tamil - Part – 1
வாழ்க்கை தத்துவ கவிதைகள்
MOTIVATIONAL TAMIL QUOTES
கவிதைகள் தமிழ் வலைதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்,
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய வாழ்க்கையில் தமிழ் மொழி வார்த்தைகளைக் கொண்டு தங்களுக்கு வாழ்க்கை தத்துவங்களை தமிழ் மொழியில் கவிதைகளாக கொடுக்கப்பட்டுள்ளது, கவிதைகள் தமிழ் பதிவுகளில் வாழ்க்கையின் மேற்கோள்கள், வாழ்க்கையின் தத்துவம், குடும்ப வாழ்க்கை, மனித வாழ்க்கை, பொன்மொழிகள் வாழ்க்கை தத்துவம் போன்ற அனைத்தையும் கவிதைகளாக தொகுத்து வழங்கி இருக்கிறோம், தமிழ் மொழி கவிதையை நீங்களும் எங்களுடன் சேர்ந்து தமிழ் மொழிக் கவிதைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை கவிதைகள் - Life Quotes in Tamil
வாழ்க்கையில் படும் துயரங்கள் யாவும்
ஒரு நாள் மாறும் என்று ஒவ்வொரு நாளும்
மனிதன் ஓடிக்கொண்டு தான் இருக்கிறான்
கற்பனை உலகில் வாழும் மனிதரை
ஒரு பொழுதிலும் நம்மால்
திருப்தி படுத்த முடியாது
நம் உடம்பில் பட்ட காயம் அழித்தாலும்
நம் மனதில் பட்ட காயங்களை
எவற்றாலும் அழிக்க முடியாது
அன்பு கொண்டு வாழும்
உலகில் அனைவரும்
அன்பின் சாட்சியங்களே
சங்கமிக்கும் இரு மனங்களின்
போராட்டம் ஜெயித்து விடுகிறது
காலம் சொல்லும்
வாழ்க்கை பள்ளியறையில்
பறவைகள் அனைத்துக்கும்
சிறகுகள் உண்டு
ஆனால் உன்னை நினைக்கும் போது
நானும் பறக்கிறேன்,
சிறகுகளோடு என் மனதுக்குள்
செல்வத்தை பெருக்கிக் கொள்ளப்
போராடும் வாழ்க்கை பந்தயத்தில்
பல நல்ல மனங்களை
சேர்த்துக் கொள்ள மறந்து விடுகிறோம்
விலங்குகளுக்கு எப்படி நடந்து
கொள்ள வேண்டும் என்று
கற்பிக்கும் நாம் விலங்கை விட
மோசமாக நடந்து கொள்கிறோம்
நம் வாழ்க்கையில்,
வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள்
எது வந்தாலும் அவற்றை கணக்கிட்டு
கொண்டே வெற்றி நடை போட வேண்டும்
யார் வேண்டுமானாலும் முன்னேறி செல்லலாம்
ஆனால் முன்னேற ஒரு படி மற்றவர்களுக்கும்
நீ உதவி செய்துவிட்டு சென்றுவிடு
![]() |
Motivational Quotes in Tamil |
இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு
கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம்,
ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று
இருந்து கொண்டே தான்
இருக்கிறது வாழ்க்கையில்
நிம்மதி இருந்தால் நிமிடம் கூட வீணாகாது
நிம்மதி இல்லாவிட்டால் நிமிடம் என்ன
வாழ்நாளே வீணாகிவிடும்
யாசகம் கேட்டு நிற்கும் கைகளை பார்த்தால்
அந்த கடவுளே இறங்கி வந்து தானம் செய்வார்
பாதை இல்லாத போதும்
உன் பாதங்களை பதிய வை
புதிய பாதை ஆகட்டும்
கோபத்திற்கு இருக்கும் மரியாதை
யாரும் புன்னகைக்கு கொடுப்பதில்லை
Motivational Quotes in Tamil
பேரின்பம் வேண்டாம்
சிறு சிறு சந்தோஷங்கள் போதும்
நம் வாழ்வை அனுபவித்து வாழ
வெற்றி பெறும் நேரத்தை விட
நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே நாம் பெரும் பெரிய வெற்றி
விட்டுக்கொடுங்கள் அல்லது
விட்டு விடுங்கள் நிம்மதி நிலைக்கும்
தொலைவின் தேடல்கள் எல்லாமே
அருகில் இருந்த போது தொலைக்கப் பட்டவையே
ஒரு பெண்ணின் உடலை அடைவதில்லை ஆண்மை
அவளின் நம்பிக்கைக்கு உயிரோட்டம் தருவது தான்
உண்மையான ஆண்மை
ரசிப்பதற்கு ஏதேனும் ஒரு விஷயம்
தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை
வாழ்க்கை அழகானது
மக்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்
அவர்களின் வாழ்நாள் பிரதிபலிப்பு
இல்லாததை நினைத்து ஏங்காமல்
இருப்பதை வைத்து வாழ
கற்றுக் கொள்ள வேண்டும்
மரக்கிளையில் வந்து அமரும் பறவையாய்
அவ்வப்போது வந்து செல்கிறது சந்தோஷம்
கரையும் மெழுகில் இருளை கடந்து
விட முடியும் என்ற நம்பிக்கை
வாழ்க்கையிலும் இருக்கட்டும்
motivational quotes in tamil
motivational quotes tamil
motivational tamil quotes
tamil quotes in tamil
positive tamil quotes in one line
கடவுள் இருக்கிறாரா இல்லையா
என்று தெரியவில்லை, ஆனால்
சில மனிதர்கள் உருவில்
கடவுளை காண்கிறோம்
மனிதர்கள் வாழும்
இரும்பு கோட்டைக்குள்
பல எக்கச்சக்க மிருகங்கள்
வாழ்க்கையில் சாதிக்க
நிறைய வழிகள் உள்ளன,
ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும்
வழிகள் சிலவே
வானத்தில் பறந்து செல்லும்
பறவைகளின் இறகுகளை
கண்டவுடன் என் மனம்
ஏனோ பறக்கத் துடிக்கிறது
நல்லகுணம் கொண்ட மனிதனை
இறைவன் சோதிக்கிறான்
கெட்ட குணம் கொண்ட மனிதர்களால்
இறைவனை நாம் பரிசோதிக்கலாம்
கற்பனை உலகில் வாழும் மனிதன்
தன் வாழ்நாள் எல்லாம் கற்றவைக்
கொண்டு தான் உலகில் வாழ முடியும்
என்பதை மறந்து விடுகிறான்
Motivational Tamil Quotes
தன்னிலை மாறாத ஒருவன்
பொருள் ஆசையால் தனக்கென
ஒரு நிலை இல்லாமல் வாழ்கிறான்
பணம் பணம் என்றும் வாழும் உலகில்
பணத்தால் மட்டும் வாழ முடியாது
என்று காட்டிவிடுகிறது சிலரின் தியாகங்கள்
பெயரும் பணமும் புகழும்
நம்மை தேடி வர வேண்டும் என்றால்
உண்மையும் உழைப்பும் உறுதியும்
நம்பிக்கையும் நம்மிடத்தில் இருக்க வேண்டும்
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை
உங்களுக்குள் இருக்கும் திறமையை
நீங்களே வளர்த்துக் கொண்டால்
அதுவும் உங்களுக்கு ஒரு செல்வம் தான்
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவர்கள்
வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்
வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்கள்
வாழ்க்கையே ஜெயிக்கிறார்கள்
ஒருவன் செய்யும் ஒவ்வொரு செயலும்
அவனை வலிமை உடையவனாக மாற்றுகிறது
கற்பிக்கும் ஆசானுக்கும் மனம் உண்டு
கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும்
ஈரம் உண்டு
தொலைதூர வாழ்க்கை பயணத்தில்
அனைவரும் வாழ்க்கை என்னவென்று
கற்றுக்கொள்ள நடந்தே செல்கிறோம்,
வாழ்க்கை முடியும் வரை நாம்
உன்னைப் பற்றி உலகம் என்ன சொல்லும்
என்று யோசிப்பதை விட
நீ உலகுக்கு என்ன சொல்ல
வேண்டும் என்று யோசி
கண்ணிமைக்கும் நொடியில் கலைந்து போகும்
கனவு போல் இல்லாமல் அது நிஜமாக்கி
அனைவரையும் அதுபோல கனவு காண வை
உன் வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு,
பெண்ணே சுட்டெரிக்கும் சூரியனை
பார்த்து பயப்படாதே நீ,
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது
ஏன் அவர்களை சுட்டெரிக்கும்
சூரியனாய் மாற மறந்து விடுகிறாய்
![]() |
Life Quotes in Tamil |
Positive Quotes in Tamil
அன்பை மற்றும் மிக எளிமையாக எண்ணி விடாதே
அன்பை மட்டுமே வைத்து வாழக்கூடிய
உயிர்கள் பல இருக்கிறது இவ்வுலகில்
ரயில் பூச்சி கூட தன்னை தொட்டவுடன்
தற்காத்துக் கொள்ள சுருண்டு விடுகிறது
மனிதன் மட்டும் ஏன்
எல்லாவற்றையும் கண்டு பயப்படுகிறாய்
காலத்தின் கட்டாயத்தில் அனைவரும்
ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடி கடந்தவர்கள்
வாழ்க்கையை ஜெயிக்கிறார்கள்,
இடையில் நின்றவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்
பட்டாசு போட்டு கொண்டாடும் தீபாவளியை விட,
வீட்டில் பல நல்ல திட்டங்களை போட்டு
கொண்டாடப்படும் வாழ்க்கை ரொம்ப அழகானது
வெற்று காகிதத்தில் பேனாவைக் கொண்டு எழுதுகிறோம்,
ஆனால் எழுதிய பிறகு அந்த காகிதத்தை
வெற்று காகிதமாய் மாற்ற முடியாது,
அதே போல தான் சிலருக்கு
இங்கே அப்படி ஒரு வாழ்க்கை அமைகிறது,
வானத்தில் தெரியும் நிலவு அழகானது
அதை பிடித்திட அனைவருக்கும் ஆசை,
ஆனால் முடியாத ஒன்றை முடியும் என்று
நினைக்கத் தூண்டுவது தான் உண்மையான ஆசை
கால்களுக்கு எதுவும் நேராத வண்ணம்
செருப்பாய் இருப்பது போலத்தான்
இங்கே சிலருக்கு வாழ்க்கை அமைகிறது.
படிக்க தூண்டும் முறையை கற்றுக் கொடுக்க,
இவ்வுலகில் ஆசிரியர் அவர்களால் மட்டுமே முடியும்
வளர்ந்து நிற்கும் மரங்களின் நிழலில் அமர்ந்திட
அனைவரும் ஒரு மரக்கன்றாவது
தன் வாழ்நாளில் எல்லோரும் நடுவோம்
பசியைப் போக்கும் உணவுக்காக
ஏங்கும் பல உயிர்கள் இவ்வுலகில்
இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
இப்படிக்கு மிருகங்கள்,,,
கண்ணாடி நீர் தொட்டியில் இருக்கும்
மீன்களைப் போல தான் நானும் நீந்துகிறேன்
வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் நான்
________________________________________💗________________________________________
தங்களுடைய தமிழ் ஆர்வத்திற்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கவிதைகளை 💬 படித்ததிற்கும் மிக்க நன்றி மற்றும் பாராட்டுகள், மேலும் தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களை இங்கே எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
________________________________________💗________________________________________
motivational quotes in tamil - motivational quotes tamil - motivational tamil quotes - tamil quotes in tamil - positive tamil quotes in one line - positive life quotes in tamil - success motivational quotes in tamil - positive quotes in tamil - life success motivational quotes in tamil